Wednesday, July 13, 2011

எச்சரிக்கை

வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வெளிநாட்டு அழைப்பு : பி.எஸ்.என்.எல்., எச்சரிக்கை வாடிக்கையாளர்களின் பணத்தை கறக்கும் வகையில் மொபைல் போனில் வெளிநாட்டு அழைப்புகள் வருகின்றன என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது. குறிப்பிட்ட சில எண்களில் துவங்கும் அழைப்புகளை தொடர்பு கொண்டால், தொடர்பு கொள்பவரின் கணக்கில் உள்ள பணம் முழுவதும் காலியாகிறது. அவை அனைத்தும் வெளிநாட்டு அழைப்புகளாக உள்ளன. ப்ரீபெய்டு வைத்திருப்பவர்களுக்கு எளிதில் இந்த அழைப்பு கிடைப்பதால், அவர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகை முழுவதையும் இழக்கின்றனர். இதுகுறித்து பி.எஸ்.என்.எல்., நிர்வாகத்திற்கு வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.


எச்சரிக்கை: 239 287, 9051, 9052, 9062, 9106 என்ற எண்களில் தொடங்கும் அழைப்புகள் வந்தால் வாடிக்கையாளர்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். கால் ரிசீவ் செய்தால் வினாடிக்கு 10 ரூபாய் வீதம் காலியாகிவிடும் என பி.எஸ்.என்.எல். நிர்வாகம் எச்சரித்துள்ளது.

Tuesday, May 24, 2011

ஒக்காந்து யோசிப்போம்லே

கண்ணா நீ
கல்யாணத்திற்கு முன்னாடி சூப்பர்மேன்,கல்யாணத்திற்கு பின்னாடி ஜென்டில்மேன்,பத்து வருஷத்திற்கு பிறகு வாட்ச்மேன்,நாற்பது வருஷத்திற்கு பிறகு டாபர்மேன்...

ஒரு பொண்ணு போட்டோவுல
தேவதைமாதிரி இருந்தாலும்
நெகடிவ்லபிசாசு மாதிரிதான் இருப்பா
அப்பா அடிச்சா வலிக்கும்
அம்மா அடிச்சா வலிக்கும்
ஆனால் சைட் அடிச்சா வலிக்காது

உன்னை யாரவது
லூசுன்னு சொன்னா
கவலை படாதே!
வருத்த படாதே!
ஃபீல் பண்ணாதே!
உங்களுக்கு எப்படி
தெரியும்ன்னு கேள்!

காதல் ஒரு மழை மாதிரி,
நனையும் போது சந்தோஷம்.
நனைந்த பின்பு ஜலதோஷம்.

மகனே பரிட்சையில் எத்தனை கேள்வி வந்தது?
ஐந்து கேள்விப்பா
நீ எத்தனை கேள்வி விட்டுட்டே?
முதல் மூணும் கடைசி இரண்டும்
வெரிகுட் கீபிடப்

டேய் என் ஜாதகப்படி எனக்கு அறிவு ரொம்ப ஜாஸ்தியாம்.
இப்பவாவது தெரியுதா நான் ஏன் ஜாதகத்தை நம்புறதில்லைன்னு???????

என்னங்க ஏன் அடிக்கடி சமையல் ரூம் பக்கம் போகிறீங்க?
டாக்டர் சுகர் இருக்கான்னு அடிக்கடி செக் பன்னிக்க சொன்னார் அதான்.

நீங்க உடனடியா மீன், ஆடு, கோழி சாப்பிடுவதை நிறுத்த வேண்டும்.
அதுக சாப்பிடுவதை நான் எப்படி நிறுத்த முடியும் டாக்டர்.
டாக்டர் என் மனைவி ஓவரா டி.வி. பாக்குறா'' எந்த அளவுக்கு பாக்குறாங்க?''கரண்ட் கட்டானாலும், டார்ச் அடிச்சி பாக்குற அளவுக்கு!!!
வக்கீல்: உனக்கு திருமணமாகிவிட்டதா?சர்தார்: ஆகிவிட்டது.
வக்கீல்: யாரைத் திருமணம் செய்து கொண்டிருக்கிறாய்?சர்தார்: ஒர் பெண்ணை.
வக்கீல்: பெண்ணைத் திருமணம் செய்து கொள்ளாமல் ஆணையா திருமணம் செய்து கொள்வார்கள்?சர்தார்: ஆம் என் தங்கை செய்து கொண்டிருக்கிறாளே!!!..
சார்,
டீ மாஸ்டர்டீ போடறாரு,
பரோட்டா மாஸ்டர்பரோட்டா போடறாரு,
மேக்ஸ் மாஸ்டர்மேக்ஸ் போடறாரு,
நீங்க ஹெட்மாஸ்டர் தானேஏன் மண்டய போட மாட்டேங்கிறீங்க?..


''
நம்ம பையன் எங்க பணம் வைத்தாலும் எடுத்திட்டு போயிடறாங்க''
''
அவனுடைய காலேஜ் புத்தகத்தில் வை.... பத்திரமா இருக்கும்''

ஒரு காப்பி எவ்வளவு சார் ?
5
ரூபாய்.
எதிர்த்த கடையில 50 காசுன்னு எழுதியிருக்கே ?
டேய். சாவுகிராக்கி அது XEROX காப்பிடா!

உங்க கிட்னி பெயில் ஆகிடுச்சு.
நான் என் கிட்னிய படிக்க வைக்கவே இல்லயே டாக்டர் அது எப்படி பெயில் ஆகும்.

Wednesday, April 27, 2011

அழுவதா? சிரிப்பதா?

எனக்கு தெரிந்த நண்பர் தன் மகன் தாமதமாக வீட்டிற்கு வந்ததற்காக கோபப்பட்டார்.பார்ரில் சரக்கு அடித்தவிட்டு வந்தவனை, "எங்கடா போய்ட்டு இவ்வளவு லேட்டா வர்ற?"
"என் ஃப்ரண்ட் வீட்டிற்கு போனேன்".
நண்பர் மகனின் பத்து நண்பர்களுக்கு போன் செய்தார்.
அதில் நான்கு பேர், "அங்கிள் ரவி என் வீட்டில்தான் இருந்தான்",என்றனர்.
அதில் மூன்று பேர்," ரவி இப்போதான் என் வீட்டிலிருந்து கிளம்பினான்", என்றனர்.
அதில் இரண்டு பேர்,"ரவி இங்கேதான் இருக்கிறான் அங்கிள். ஃபோனைக் கொடுக்கட்டா..? பேசுறீங்களா?", என்றனர்.
அதில் ஒருவன் மட்டும்," சொல்லுங்கப்பா. நான் ரவி பேசுறேன்", என்றான்.
நண்பருக்கு தலை சுற்றியது.

              இதை நினைத்து அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. இன்றைய தலைமுறை எல்லாவற்றிலும் வெகுவாக முன்னேறிக்கொண்டிருக்கிறது. பெற்றோர்களிடம் கணிசமாக கிடைக்கும் 'பாக்கெட் மணி'யை தவறுதலான வழிகளில் உபயோகப் படுத்துகிறார்கள். இது தவிர்க்க முடியாத மாற்றம்தானா என்று குழப்பமாக உள்ளது. அட்வைஸ் பண்ணவும் தயக்கமாக உள்ளது. கலாச்சார மாற்றம் தவறான திசையில் சென்று கொண்டிருப்பதை எல்லோரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். 

இன்றைய கேள்வி: புரட்சி தலைவர் எம் ஜி ஆர் சினிமாவில் இறந்து போனதாக ஒரு படமும் இல்லை என்று நினைக்கிறேன். அப்படி இருந்தால் பின்னூட்டத்தில் சேர்க்கவும்.


இன்றைய அதிர்ச்சி : மலையாளிகள் மது நிறைய அருந்துவார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். கேரளாவில் பெட்ரோலும் (டீசல், பெட்ரோல், எடிஎஃப் மற்றும் மண்ணென்னை உட்பட) மதுவும் எவ்வளவு விற்பனை ஆகியிருக்கிறது. பாருங்கள்

Year       Petroleum     Liquor (Rs in Crore)
2005-06   2,028          1,422
2006-07   2,338          1,694
2007-08   2,341          1,976
2008-09   2,670          2,509
2009-10   2,903          3,000
(Petroleum includes petrol, diesel, ATF, kerosene)
Sources: Finance dept, KSBC


அடங்கொய்யால...